நடைபாதை வியாபாரிகள்: உரிமைகளும் சவால்களும்
இந்தியாவின் பொரு ளாதாரத்தில், தெரு வோர வியாபாரிகள் மிக முக்கிய மானதொரு பங்கை வகிக்கின்றனர். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தத் தொழில், நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்கவும் உதவுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு கண்ணியமான முறையில் தொழில் செய்ய வழிவகுக்கவும், இந்திய அரசு "நடை பாதை வியாபாரிகள் (வாழ்வாதாரம் - நடைபாதை வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014" (Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act, 2014) என்ற ஒரு முக்கியச் சட்டத்தை இயற்றி யுள்ளது. சட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கிய அம்சங்கள் நடைபாதை வியாபாரி களின் வாழ்வாதாரத்தைப் பாது காப்பதும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுமாகும். நடைபாதை வியாபாரிகளை இந்திய தண்டனைச் சட்டம் அல்லது காவல்துறை சட்டம் மூலமாக கைது செய்ய இயலாது. சாலையோர வியாபாரி களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான ஒளி விளக்கு, நிழற்குடை, தூய்மையான குடிநீர், நிரந்தரமான பாதுகாப்பு பெட்டகங்கள் போன்ற வசதிகளை செய்து தரவேண்டும். நடைபாதை வியாபாரி களுக்கு வங்கியில் கடன் பெறு வதற்கான ஏற்பாடுகள் உண்டு. ஆனால் அவை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. நடைபாதை வியாபாரிகளுக்கான முக்கிய உரிமைகள் "நடைபாதை வியாபாரிகள் சட்டம், 2014" நடைபாதை வியாபாரி களுக்கு பல முக்கியமான உரிமை களை வழங்குகிறது. வியாபாரம் செய்வதற்கான உரிமை: நடைபாதை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நியாயமான முறையில் வியாபாரம் செய்ய உரிமை உண்டு. இவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதக்கூடாது என்று சட்டம் தெளி வாகக் கூறுகிறது. மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் நடைபாதை வியாபாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டை அவர்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது. நகர விற்பனை குழு இந்தச் சட்டம் ஒரு நகர விற்பனை குழுவை அமைக்க வழிவகை செய்கிறது. இந்தக் குழுவில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். இந்தக் குழுவின் முக்கியப் பணி, வியாபாரிகளின் பிரச்சனைகளை விவாதித்து, அவர்களுக்கான நலத் திட்டங்களை உருவாக்குவது மற்றும் அவற்றைச் செயல்படுத்துவது. ஒரு நடைபாதை கடையை அகற்றுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு வியாபாரிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். உடனடியாக வெளி யேற்றக் கூடாது. வியாபாரிகள் தங்கள் பிரச்சனைகளை முறையிட ஒரு குறைதீர்க்கும் குழுவிடம் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். 30 நாட்கள் நோட்டீஸ் காலம் முடிந்த பின்னரும், வியாபாரி இடத்தை காலி செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு ரூ.250 வரை அபராதம் விதிக்கலாம். அதற்குப் பிறகே கட்டாயமாக அப்புறப்படுத்த முடியும். உள்ளாட்சி அமைப்புகள் வியாபாரம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத பகுதிகளை வரை யறுக்க வேண்டும். ஆனால், இந்த வரையறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். சவால்கள் மற்றும் சட்ட அமலாக்கமின்மை மேற்கண்ட சட்ட உரிமைகள் இருந்தபோதிலும், நடைபாதை வியா பாரிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நகராட்சியும் அரசும் இதைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. புதுச்சேரி மாநிலத்தில் எண்ணற்ற நடைபாதை வியாபாரிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். முக்கிய சவால்கள் சில: சட்ட அமலாக்கமின்மை: பல அதிகாரிகளுக்கு இந்த சட்டம் குறித்து போதிய தெளிவு இல்லை அல்லது சட்டம் முழுமையாக அமல்படுத்தப் படுவதில்லை. ஆக்கிரமிப்பு எனக் கருதுதல்: சட்டம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், பல அதி காரிகள் நடை பாதை வியாபாரிகளை ஆக்கிரமிப்பாளர்களாகவே கருதி நடவடிக்கை எடுக்கின்றனர். அடையாள அட்டை வழங்கப்படாதது: பல இடங்களில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதில்லை, இதனால் அவர்கள் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லாமல் சிரமப்படு கின்றனர். நகர விற்பனை குழுக்கள் செயல்படாதது: சில இடங்களில் நகர விற்பனை குழுக்கள் முறையாகச் செயல்படுவதில்லை அல்லது வியாபாரிகளின் கருத்துக்களைப் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றன. காவல்துறையின் தொல்லை: காவல்துறையினரால் அப்புறப்படுத்துதல், பொருட்கள் பறிமுதல் போன்ற தொல்லைகள் தொடர்வதாகப் புகார்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பங்களிப்பு: நடைபாதை வியாபாரிகள் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். அவர்களின் உரிமைகளை மதித்து, சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவது மிகவும் அவசியம். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இச்சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி, நடைபாதை வியாபாரிகளுக்கு நியாயமான முறையில் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாகும்.