சென்னை:
தமிழக தத்துவ நூல்களின் வரிசையில் தலைசிறந்த நூல்களில் ஒன்றாக மதிக்கப்படக்கூடிய ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று - நூலினை வெளியிட்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் நெடுஞ்செழியன் திராவிடஇயக்கத்துக்குத் தேவையான வரலாறு, அரசியல்,தத்துவ நூல்களை எழுதித் தரும் பேராசிரியர்களில் ஒருவராக அவர் வளர்ந்து வந்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் அறிவுப் பணியை விடாமல் தொடர்ந்தவர் பேராசிரியர் நெடுஞ்செழியன்” என்றார்.
இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின்‘கொடை, பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும்’, ‘தமிழ் எழுத்தியல் வரலாறு,’ ‘இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழரும் தமிழரின் அடையாளங்கள்’, ‘சங்ககாலத் தமிழர் சமயம் போன்ற தலைசிறந்த நூல்களை எழுதியவர் நெடுஞ்செழியன் என்றும் கூறினார்.‘ஆசீவகமும் ஐயனார்வரலாறும்’ என்ற நூலைஎழுதிய சமூகநீதிப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், அந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்ட சமூகநீதிப் பேராசிரியர் சக்குபாய், நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்ட மத்திய முன்னாள் அமைச்சரும் திமுக கொள்கைப்பரப்புச் செயலாளருமான ஆ.ராசா,டி.கே.எஸ். இளங்கோவன்,சுப.வீ., பேராசிரியர் ம.செல்வராஜ், இராமசாமி, கல்யாணி, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி,சண்முகநாதன் உள்ளிட்ட பலர் இந்தவிழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக முனைவர் சி.இராசமாணிக்கம் வரவேற்றார். பேரா. க.நெடுஞ் செழியன் நன்றி கூறினார்.