சென்னை:
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமை யாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனை களுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்த பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், “விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 72 கோடி ரூபாயில் கட்டப்படும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் ரூ.8 கோடியில் கட்டிக் கொடுக்கப்படும்” என்றார்.5 புதிய வருவாய் வட்டாட்சியர் அலு
வலகங்களுக்கு கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் 26 கோடி ரூபாயில் கட்டித் தரப்படும். புல எல்லையை அளந்து காட்ட கோரி பொதுமக்கள் எங்கிருந்தும் இணையம் வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முறையற்ற நில பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையில் இணையவழி சேவை யில் உள்ள நில ஆவணங்களை பெற அரசுத்துறைகள், நீதிமன்றங்கள், பாதுகாப்புத்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறினார்.