tamilnadu

img

பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம்!

தமிழ்நாடு அரசு சார்பில் பிரபல பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாடகர் பி.சுசீலாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக 25,000 பன்மொழி பாடல்களை பாடியவர் பி.சுசீலா. அவர் பத்மபூஷன் விருது மற்றும் 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.