சென்னை:
கொரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு முடித்தவர்களுக்கு 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு வருகிற 20 ஆம் தேதிக்குள் அனுமதி பெற முயற்சி எடுப்பதாக அமெரிக்காவில் உள்ள தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி வைசி தெரிவித்துள்ளார். எனவே, பூஸ்டர் தடுப்பூசி மக்கள் பயன் பாட்டுக்கு இன்னும் வராவிட்டாலும் இதில் தமிழக அரசு எடுக்கும் முயற்சி என்ன? ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி விளக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்த குழு செயல்முறை எதையும் மத்திய அரசுக்கு அளிக் காத நிலையில் 3-வது டோஸ் பூஸ்டர் இந்திய அளவில் எங்கும் தொடங்கவில்லை”என்றார்.தமிழகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து தடையின்றி தடுப்பூசி வருகிறது. ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி வந்தாலும் இப்போதுதான் அதிகபட்சமாக 19,22,80 தடுப்பூசி ஒரே நாளில் தமிழகத்துக்கு வந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
எல்லையோர மாவட்டங்கள்
கேரள-தமிழக எல்லையோர மாவட்டங்களில் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண் டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். ஒரே நாளில் 20 லட்சம் இலக்கு வைத்து தடுப்பூசி போட கூறியுள்ளார். தற்சமயம் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 6,20,255 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்றும் வருகிற 12 ஆம் தேதி எல்லையோர 9 மாவட் டங்களிலும் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.2 டோஸ் தடுப்பூசி போட்டலே 97.5 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது. 2 தடுப்பூசி போட்ட பிறகு இறப்பு சதவீதம் இல்லாத நிலை உள் ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று அங்ககொன்று இங்கொன்றுமாக இருந்தாலும் இறப்பு என்பது இல்லை. எனவே 3-வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழ் நாட்டில் இல்லை. இந்தியாவிலும் கிடையாது. உலகில் எங்கும் இல்லை. அப்படி ஏதாவது 3-வது டோஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் முதலில் அந்த பணி தொடங்கும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.