சென்னை:
பள்ளிகள் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் வகுப்புகளைச் செயல்படுத் துவது குறித்து அரசு அமைத்துள்ள குழு பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் அவர், “பாடத் திட்டங்களைப் பள்ளிகள் திறக்கும்போது அதற்கேற்ப பாடங்களை மாற்றி அமைப்பது குறித்து அரசு அமைத்துள்ள குழு அளிக்கும் அறிக்கையினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்.ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குப் படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். தற்போதைய சூழலில் ஆன் லைன் வகுப்புகள் மட்டுமே தீர்வாக அமையும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.