மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாயி ஒருவர் சொட்டுநீர் பாசனம் மூலம் சம்பங்கி சாகுபடி செய்து வருகிறார். அழகக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தோட்டக்கலை துறை மானிய உதவியுடன் சம்பங்கி சாகுபடி செய்து வருகிறார். வறட்சி நிலவி வரும் நிலையிலும், குறைவான தண்ணீரை கொண்டு தெளிப்பு பாசன கருவிகள், சொட்டுநீர் பாசன கருவிகள் மூலம் சம்பங்கி, செண்டுமல்லி, குண்டுமல்லி சாகுபடியை திறம்பட செய்து வருகிறார். சொட்டுநீர் பாசனம் மூலம், பூக்கள் சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம் என சரவணன் தெரிவித்தார்.