tamilnadu

img

சு.வெங்கடேசன் மாபெரும் வெற்றி பெறுவார்

மதுரை, ஏப்.6-மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.மதுரையில் செய்தியாளர்களிடம்அவர் கூறியது: 


மோடி தயவில் எடப்பாடி


மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். மக்களவை தொகுதியில் சீட்டுவழங்கவில்லை என்பதற்காக அதிமுகவிலிருந்து வெளியேறவில்லை, சுயமரியாதை இல்லை என்பதால் வெளியேறினேன். அதிமுகவின் இரட்டை இலைசின்னம் மற்றும் கொடியை வைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்குப் பாதகம் செய்து வருகின்றனர். முகவரி இல்லாத இருவரும் பிரதமர் நரேந்திர மோடி தயவில் சொத்துக்களை காப்பாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் தகுதியே இல்லாத பாஜகவிற்கு 5 தொகுதிகளைஒதுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கீடு செய்து கட்சியை விட்டுக் கொடுத்துள்ளனர்.


தர்மயுத்தம் என்னவாயிற்று?


தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு 2 தொகுதிகளில் பலமான போட்டி உள்ளது. பிற தொகுதிகளில் திமுககூட்டணி எளிதில் வெற்றி பெறும். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா ஆகியோர் மாநில உரிமைகளையும், சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். அத்தகைய நிலை தற்போது இல்லை. தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலா குடும்பத்தினரிடம் கட்சிசென்று விடக்கூடாது என கூறிய துணை முதல்வர், அதிமுகவைதன் குடும்பத்திற்காக நடத்தி வருகிறார்.


அதிமுக அடகு வைக்கப்பட்டுவிட்டது


மதுரையின் முன்னாள் மேயரும், தற்போது எம்எல்ஏவாக உள்ள வி.வி.ராஜன்செல்லப்பா மக்களவை தேர்தலில் தனது மகனுக்கும் சீட்டு பெற்றுள்ளார். அதிமுகவில் வேறு வேட்பாளர்கள் இல்லையா?. எம்ஜிஆர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த போது கூட, கருணாநிதிஆட்சிஇல்லை என்றாலும் கட்சியை விட்டு கொடுக்காமல் காப்பாற்றியவர். ஆனால் எம்ஜிஆர், ஜெயலிலதாவிற்கு பிறகு அதிமுக அடகு வைக்கப் பட்டுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர்,ஜெ. ஜெயலலிதாவிற்கு பிறகு ஆளுமையானதலைவர்கள் யாரும் இல்லை.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கும் எனக்கும் தேர்தல் வழக்கு இருந்தாலும், திமுககூட்டணிக்கு ஆதரவுதெரிவித்ததால், கார்த்திக் சிதம்பரத்திற்கு என்னால் முடிந்தவரை சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வாக்குச் சேகரிப்பேன். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதித்தனர். ஜிஎஸ்டியால் சிறு, குறுந் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டனர்.


மதுரையில் அதிமுக வீழும்


காங்கிரஸ் மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கைகளில், நீட்தேர்வு, கல்விக் கடன்,விவசாயக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும்என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு அவசியமானது. மதுரைமாவட்டம் அமைதியாக இருக்கவேண்டுமானால் மதுரை மக்களவைத் தொகுதியில்திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் வெற்றி பெறவேண்டும். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்கே.ராஜு, ராஜகண்ணப்பனுக்கு மதுரையில் என்ன வாக்குகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணும் போதுயாருக்கு எவ்வளவு வாக்குகள் என்பது தெரியவரும். மக்களவை மற்றும் இடைத்தேர்தலில், அதிமுக கட்சி மக்களால் தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.