ராயபுரம், ஏப்.17-மக்களவைத் தேர்தலையொட்டி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று காவல்துறையினர் செவ்வாயன்று (ஏப்.16) இரவு அதிரடி சோதனை நடத்தினர்.மண்ணடி, ராமசாமி தெருவில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போது தென்காசியை சேர்ந்த நாகூர் மொய்தீன் என்பவர் தங்கி இருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த பையில் ரூ. 3.5 லட்சம் இருந்தது. இந்தபணத்துக்கான ஆவணம் நாகூர் மொய்தீனிடம் இல்லை. இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி நாகூர் மொய்தீனிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.