சென்னை:
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 எனும் புதிய கொள்கையை 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25 ஆம் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.