கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக்கோரி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேறியது.
இந்து மதத்திலிருந்து சீக்கியம் மற்றும் பவுத்த மதத்திற்கு மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க ஒன்றிய அரசிடம் உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.