வேலூர், ஏப்.25-அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர்கள் ரபேல்லூயிஸ், சுந்தரபாண்டியன், தொழிலாளர் துணை ஆய்வாளர் கமலா, உதவி ஆய்வாளர் அன்னபூரணி, கொத்தடிமைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் சகுந்தலா, சம்பத், துரை ஆகியோர் காரப்பந்தாங்கல் கிராமத்திலுள்ள ஜெயலலிதா (60) என்பவரின் சவுக்கு தோப்புக்கு சென்றனர்.அங்கு வளர்புரம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (57), அவரது மனைவி அங்கம் மாள் (50), மகன் பாளையம் (19) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் மீட்டு அரக்கோணம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.