சென்னை:
புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ’ரேபிட் டெஸ்ட்’ கருவிகளை மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தரமற்ற ‘ரேபிட் டெஸ்ட்’ பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்
தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருந்து தர கட்டுப் பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய் யப்படும் மருந்துகளும், கருவிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.அதேபோல், கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், பின்னர் இறக்குமதி செய் யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகள் காட்டுவதாக வந்தப் புகாரின் அடிப் படையில், ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனை கருவிகள் திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ் ணன் ராமசாமி அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.