பேருந்து சேவையை மீண்டும் துவக்கக்கோரி புதுவை பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை மீண்டும் துவக்கக் கோரி பல்கலைகழக மாணவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் 5 வழிதடத்தில் பயன்பெற்றுவந்த 11 பேருந்துகளை மீண்டும் கட்டணமில்லா இயக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்டு வந்த நிதியும் குறைத்துள்ளதை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது. மத்திய பல்கலைக்கழக வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைகழக மாணவர் பேரவை தலைவர் காயத்ரி தலைமை தாங்கினார். செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சஜிதா, அய்ஜாஸ், அஸ்வினி, ஜெரோம் உள்ளிட்ட பல்கலைகழக மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.