சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 27 ஆம் தேதி பந்த் நடத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.மக்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில், வருகிற 26 ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடக்கிறது’ என்றார்.