சென்னை,ஜூலை 9- தமிழகத்தில் ஆணவக் கொலை களைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை, ஆணவக் கொலைகள் செய்வது தொடர்கதை யாகி வருகிறது. கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதிக் குள் தமிழகத்தில் 3 ஆணவக் கொலை கள் நிகழ்ந்துள்ளன. கோவையைச் சேர்ந்த கனகராஜ்- வர்ஷினி பிரியா, திருச்சியைச் சேர்ந்த சத்தியநாரா யணன்- நிவேதிதா, தூத்துக்குடியைச் சேர்ந்த சோலை ராஜ்-ஜோதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட னர். இதனை அரசியல் கட்சிகள் வன்மை யாகக் கண்டித்தன. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. இந்நிலையில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிகை களில் வெளிவந்த செய்திகளின் அடிப் படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள் ளது. இந்த வழக்கு ஜூலை 9 அன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணி யம் பிரசாத் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடு த்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசு வழக்கறிஞர் மதியம் 2.15 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும், ஆணவக் கொலைகள் தொடர் பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சட்டத்தின் நிலை என்ன என் பது குறித்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் “தமிழகத்தில் சாதாரண அமைப்புகள் முதல் சட்டமன்றம் வரை சாதி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் குறிப்பாக ஆணவப்படு கொலையை தடுக்க வேண்டும் என கூறும் சில கட்சிகள் தான் சாதியையும் ஊக்குவிக்கின்றன. எனவே ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக அறிக்கையளிக்க வேண்டும்” என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.