திருவள்ளூர், ஆக. 7 - குறவர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில், கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆபாச நடனத்தை உடனடியாக தடைசெய்ய வலியுறுத்தி வியாழனன்று (ஆக.6) திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ண கிரி ஆகிய மூன்று மாவட் டங்களில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. கோயில் திருவிழாக்க ளில் குறவன், குறத்தி நட னம் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும். அதனை சமூக வலைதளங்க ளில் குறிப்பாக, வியாபார நோக்கில், நீண்டகாலமாக யு-டியூப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த கும்ப லின் மீது காவல்துறை வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும். பதிவேற்றம் செய்துள்ள காட்சி களை நீக்க வேண்டும். குறவன், குறத்தி என்ற சாதி பெயரை இணைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த்தி தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடை பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் சங்கத் தின் மாவட்டச் செயலா ளர் ஜி.குப்பன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாநில பொதுச் செய லாளர் ஏ.வி.சண்முகம், மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகி எம்.ராமசாமி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தேவா, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஜே. ராபர்ட் எபிநேசர், தையல் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. பச்சையம்மாள் ஆகியோர் பேசினர். ராணிப்பேட்டை மாவட் டம் பல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் வி.கே.தணிகாசலம் தலைமை தாங் கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அரக்கோ ணம் பகுதி அமைப்பாளர் ஏ.பி.எம்.சீனிவாசன், சிபிஎம் வட்டச் செயலாளர் துரை ராஜ் ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் வி.வேலு தலைமை தாங்கி னார். விதொச ஊத்தங்கரை நிர்வாகி எத்திராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.கோவிந்தசாமி ஆகி யோர் பேசினர். இதே போன்று வாலாஜாபேட்டை யிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.