tamilnadu

img

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்

சென்னை:
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 முன்பதிவு மையங்களும்,  பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து  நிலையங்களில் தலா ஒரு  மையமும்  அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்துநிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன் பதிவு மையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஜனவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 30 ஆயிரத்து 120 பேருந்துகள் பொங்கலுக்காக இயக்கப்படுகின்றன. இதில் சென்னையிலிருந்து மட்டும் 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.