சென்னை:
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. 12 ஆம்வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்விவரங்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தமிழகத்தில் 37,459 அரசுப் பள்ளிகளும், 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,918 தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர் கள்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,80,500 பேர் மாணவர்கள். 4,35,973 பேர் மாணவிகள்.
தசம எண்களில் மதிப்பெண்!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்று முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்று தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்புஅடைவதைத் தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, 12 ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.29 என்று வந்தால் அது முழு மதிப்பெண்ணாக 79 என மாற்றப்படாமல் 78.29 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்தப் புதிய நடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட் ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12 ஆம் வகுப்புபொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண்வழங்கும் முறையை முடிவு செய்வ தற்காகப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்க் கல்வித்துறை முதன்மைச்செயலாளர், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்திருந்தது.
அதன்படி, பத்தாம் வகுப்பு, 11 ஆம்வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 11 ஆம் வகுப்புசெய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்கள் வல்லுநர் குழு பரிந்துரைப் படி வழங்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்களே அவர்களது இறுதி மதிப்பெண்களாக அறிவிக்கப்படும்.தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந் தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து, தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.