முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை (TNTET) ஒத்திவைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு தயாராக உரிய கால அவகாசம் இல்லை; எனவே தேர்வை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்க கோரி ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.