சீர்காழி, மே 20-நாகை மாவட்டம் கொள்ளிடம் புலீஸ்வரியம்மன் ஆலயத்திலிருந்து பாரத் நகருக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தாமல் அப்படியேஉள்ளது. ஆரம்ப காலத்தில் இந்தசாலையில் கருங்கல்ஜல்லி மட்டுமே போடப்பட்டு தார் சாலையாக மாற்றாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை மேம்படுத்தி தார்சாலையாக மாற்றித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.