உடல் உறுப்புகள் தானம்
ராணிப்பேட்டை, செப். 24- ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (37) கடந்த செப்.14 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செவ்வாயன்று (செப்.23) மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முழு சம்மதத்துடன் இளையராஜா உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்தனர். அரசின் ஆணையின்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா ஆகியோர் இறந்தவர் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இளையராஜா குடும்பத்தாருக்கு அமைச்சர் சொந்த நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். இறந்த நபருக்கு மனைவி சுகன்யா, மகள் இ. பிரகதி (10), மகன் இ. அபிமன்யு ராஜா 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிகழ்வில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், வட்டாட்சியர் ராஜலட்சுமி