tamilnadu

img

குப்பநத்தம் அணை திறப்பு

திருவண்ணாமலை,அக்.18- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையிலிருந்து 47 ஏரிகளின் பாசனத்திற்காக வெள்ளியன்று (அக். 18) முதல் 11 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை  அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்  க. சு. கந்தசாமி,  மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி, மற்றும் அரசு அலுலவர்கள், பாசனதாரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,“செங்கம் வட்டம்,  குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளுக்கு  வினாடிக்கு 250 கன அடி வீதம், 243.45 மில்லியன் கன அடிக்கு  மிகாமல் 9728.04 ஏக்கர் விவசாய பாசன நிலங்கள் பயன் பெறும்  வகையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது” என்றார். போளூர் வட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, செண்பகத்தோப்பு கிராமத்தில் கமண்டல ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் 7 மதகுகளை சீரமைப்பதற்கு ரூ.16.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 15.10.2019  அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மதகு கள் சீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள்  துவங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். இந்த மதகுகள் சீரமைப்பதால் அணையின் முழு கொள்ள ளவு 287.20 மில்லியன் கன அடி எட்டப்படும். இதன் மூலம் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு வட்  டங்களில் உள்ள 48 ஏரிகளின் வாயிலாக சுமார் 7497 ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்தார்.