ராணிப்பேட்டை, ஜூன் 2- ராணிப்பேட்டை மாவட் டம் நெமிலி தாலுக்கா கண பதிபுரம் கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் கேட்டு பல முறை புகார் அளித்தும் அதி காரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதை யடுத்து அவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு புதிய மேல் நிலை தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் இன்றுவரை அது மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. குடிநீர் தொட்டி மூலம் குடி நீர் வழங்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மேல் நிலை தேக்க குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கணபதி புரம் கிளை சார்பில் கிளைச் செயலாளர் மோகன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவ லரை சந்தித்து மனு அளித்த னர். இதில் சுந்தரம், சத்திய மூர்த்தி, சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.