கொரோனா நிவாணப் பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. வழங்கினார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.