சென்னை, ஏப். 18-நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் வாக்களிக்க முடியாமல் போயுள்ளது.வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்திக்கு மட்டுமேஓட்டு உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. அதனால் அவரது மனைவி ஆர்த்தி மட்டுமே வந்தார். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லாததால், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.ஏப்ரல் 17 அன்று சிவகார்த்தி கேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும்கூட” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார்.
ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் திரும்பி சென்றுள்ளார்.நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஓட்டு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த விரக்தியை ரமேஷ் கண்ணா வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் தான் காலை ஆறு மணியிலிருந்து முதல் ஆளாய் காத்திருந்ததாகவும், தன் மனைவிக்கு வாக்கிருக்கும்போது தனக்கு மட்டும் எப்படி இல்லாமல் போகும். லிஸ்டில் பெயரில்லை என கூறுகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு ஓட்டு, ஒருவருக்கு இல்லையென்றால் அது யார் தவறு? அரசாங்கம் தான் நீதி வழங்கவேண்டும் என பதிவு செய்திருந்தார்.நடிகர் ஸ்ரீகாந்த் பெயரும், அவரது மனைவி பெயரும் பட்டியலில் இல்லை எனக் கூறி அவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பெயர்இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்துள் ளனர்.தமிழகத்தின் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.