tamilnadu

img

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு என்பது வதந்தி!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான செய்தி வதந்தி என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது. 
திருப்பதி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்திருப்பதை குஜராத் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்த நெய்யிலும் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக செய்தி வெளியானது. 
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவிய செய்தி வதந்தி என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது. 
மேலும், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் எதுவும் பெறவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.