சென்னை,ஜூலை 5- மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் விண்ணப்பம் வெளியிடப்பட்டது. 53 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்துள்ள நிலை யில் நீட் தேர்வு அடிப்படையில் அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. 8-ஆம் தேதி மாற்றுத் திறனாளி கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 9 ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.