tamilnadu

img

சாதி ஒழிப்புப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வழிகாட்டும் ஒளிச்சுடர்கள்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு செங்கொடி இயக்கத்தின் தியாக பூமியான தஞ்சை தரணியில் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம் 
மாநாட்டிற்கான சுடர் பயணங்கள் தமிழகத்தில் ஐந்து முனைகளில் இருந்து இன்று(ஆகஸ்ட் 13) துவங்குகிறது.

குழந்தைகள், பெண்கள் என 44 உயிர்கள் வெண்மணியில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டார்கள்.அவை வெறும் சடலங்கள் அல்ல. அன்றைய தஞ்சையில் தலித் மக்களின் பொருளாதார கோரிக்கைகளை சமூக விடுதலைக்கான கோரிக்கைகளை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்தனர். இது அரைப்படி நெல் உயர்த்திக் கூலியாக கேட்டதற்காக  மட்டும் நடத்தப்பட்ட படுகொலை அல்ல. செங்கொடி இயக்கம் மக்களின் சமூகவிடுதலையும் பேசுகிறது என்பதால்தான் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெண்கள் என்றும் பார்க்காமல் 44 உயிர்களை வெண்மணியில் தீயிட்டுக்கொன்றார்கள். செங்கொடி இயக்கத்தை இதனால் அழித்துவிட முடியவில்லை என்பதுவரலாறு. அந்த தியாக பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக உருவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாட்டிற்கு வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் வருவது மிகப் பொருத்த மானது. ஏனெனில் சமூக விடுதலைக்கான காரணிகளில் தலித் மக்களுக்கு நில உரிமைமிக முக்கியமானது. இன்றும் பஞ்சமி நிலத்தைமீட்டெடுப்பதற்கான போராட்டம், குடிமனைப்பட்டா மற்றும் நில உரிமைகளுக்கான போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

ஆணவப் படுகொலைக்கு எதிரான சுடர்
தமிழகத்தில் 10 தினங்களில் 5 ஆணவப் படுகொலை நடந்தது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் தானாகமுன்வந்து வழக்கை எடுத்துள்ளது. உடுமலை சங்கர் படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது. அதன் சிசிடிவி பதிவு செய்யப்பட்ட காட்சி மனங்களை உலுக்கிய படுகொலையாகும். 

அரியலூர் நந்தினி
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம்சிறு கடம்பூரில் மிக ஏழ்மையான குடும்பத் தைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினியை இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவன் காதலித்து திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். நியாயம் கேட்ட நந்தினி 2017 டிசம்பர் 25 ஆம் தேதி ஆதிக்க ஜாதி வெறியர்கள் மணிகண்டனுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்து படு கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் சுவாதி - நந்திஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சூடுகொண்ட பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாதி தலித் இளைஞனான நந்திசை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். சுவாதியின் பெற்றோர்களால் மாண்டியாவுக்கு கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தூக்கி வீசி எறியப்பட்டனர்.கோவை மாவட்டம் கனகராஜ், வர்ஷினி பிரியா இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ள முடியாத சுயசாதி பெருமை கொண்ட சாதிவெறியால் கனகராஜின் சகோதரனே இருவரை யும் கோரமான முறையில் படுகொலைக்கு உட்படுத்தினார்.பட்டியல் இன ஜாதி மக்கள் உள்ளேயே ஆணவப்படுகொலை நிகழும் கொடுமை இக்காலத்தில் நடந்துள்ளது கவலை தரும் செய்தியாகும். தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சோலைராஜா என்றபட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் அதன் உள்சாதி பிரிவைச் சேர்ந்த பேச்சி யம்மாள் என்ற ஆதியை காதலித்து திருமணம்செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடி யாத பெண்ணின் தகப்பனார் இருவரையும் படுகொலை செய்த நிகழ்வும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முகில் தகம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்ற தலித் இளைஞன் பட்டியலின உட்பிரிவைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்ததற்காக இரண்டு கைகள் கட்டப்பட்டு முகம் சிதை க்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்யப்பட்டார். ஜாதி ஆணவக் கொலை கள் தமிழகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், களத்தில் நின்று போராடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக மக்களை பண்படுத்தவும் தனிச் சட்டம் கோருவதற்கான சுடராக ஓசூரில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

கல்விச்சுடர்
சமூகநீதி கோட்பாட்டை துச்சமாக மதித்து சீர்குலைத்து வருகின்ற பாஜக அரசு புகுத்திய நீட் தேர்வால் உயிர்ப் பலியான அரியலூர் அனிதா, நந்தினி ஆகியோரின் நினைவாக கல்விச்சுடர் அரியலூரில் இருந்து புறப்பட்டு வருகிறது.தியாக பூமியாம் தஞ்சைத் தரணி செங்கொடி இயக்கத்தால் சிவந்த மண். பல தியாகிகளைத் தந்தது. தஞ்சையில் பட்டியல் இன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடிய என். வெங்கடாசலம் நினைவுச் சுடர் தஞ்சையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. 
தமிழகத்தில் வன்கொடுமைகள், படுகொலைகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவருகிறது. தென்மாவட்டத்தில் சங்பரிவார் கூட்டம் சில சாதிக் குழுக்களோடு சுயசாதி பெருமைகளை, சாதியப் பெருமிதங்களை தூக்கிப்பிடித்து வருகிறது.தென் மாவட்டங்கள் சாதிய கட்டமைப்பு களும் சாதிச் சங்க செயல்பாடுகளும் அதிக மாக இருக்கும் பகுதியாகும். நெல்லையில் சில வருடங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகரைச் சேர்ந்த கரையிருப்பு கிராம மக்களின் அன்பைப் பெற்ற அசோக் என்ற இளைஞன் ஜாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையும்கல்வியும் இளைஞனின் அடிப்படை உரிமைஎனப் போராடி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டவர் தான் தோழர் அசோக். கரையிருப்பு மக்களுக்காக குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக போராடிய துடிப்புமிக்க இளைஞர் அசோக்படுகொலை செய்யப்பட்டார். அச்சுறுத்தலும் அடக்குமுறையும் எங்களை எதுவும் செய்து விட முடியாது என்று எழும் பகத்சிங்கின் பாரம்பரியத்தின்  வாரிசான அசோக் நினைவாக சுடர் நெல்லை மாவட்டத்தில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

மு.கந்தசாமி,மாநிலச் செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி