கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்)
65வது பிறந்த தினம் காணும் எல்ஐசிக்கு வாழ்த்துக்கள். தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இந்த 64 ஆண்டுகளில் எல்ஐசி நிறுவனம் இந்திய நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு கோடிக்கணக்கான நிதியினை வழங்கியுள்ளது. நாடு நிதி நெருக்கடியினை எதிர்கொண்டபோதெல்லாம் அரசிற்குக் கை கொடுத்துள்ளது. பாலிசி தாரர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கியுள்ளது. இத்தகைய நிறுவனம் பொதுத்துறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்)
இந்தியாவின் உயிர்நாடி எல்ஐசி. இந்த ஓராண்டு மட்டும் அரசிற்கு தன்னுடைய பங் காக எல்ஐசி கொடுத்திருக்கும் தொகை ரூ.2,600 கோடி. இது போன்று தனியார் நிறுவனங்கள் அரசிற்கு வழங்குமா? ஆகவே தான் எல்ஐசி பொதுத்துறையில் பாதுகாக்க வேண்டும்.
திருச்சி சிவா (திமுக)
பெருமைமிகு பொதுத்துறை நிறுவனம் எல்ஐசிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த் துக்கள். 1956ல் 5 கோடியில் துவங்கிய நிறுவனம், இன்று 32லட்சம் கோடிகளோடு இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று.
வைகோ (மதிமுக)
இந்தியத் திருநாட்டிற்கு எல்ஐசி வழங்கியுள்ள நிதி ஆதாரங்களுக்காக வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நிறுவனம் பொதுத்துறையிலேயே தொடர் வதற்கான போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் முழு ஆதரவை நல்கவேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
45 கோடி மக்களுக்கு சேவை செய்கிற நிறுவனமாக, பல்வேறு திட்டங்களுக்கு நிதிஆதாரம் வழங்குகிற நிறுவனமாக இருக்கிறஎல்ஐசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதனை அழிப்பதற்கான சதி நடைபெறுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
முத்தரசன் (சிபிஐ)
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் எல்ஐசி. அது பொதுத்துறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜவஹிருல்லா (மமக)
மின்சாரம் போன்று பல்வேறு துறைகளுக்கு உதவி வருகிற நிறுவனம் எல்ஐசி. எல்ஐசிக்கு எதிரான மத்திய அரசின் போக்குமாற்றப்பட வேண்டும்.
சுப.வீரபாண்டியன், பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, திரைக் கலைஞர் டெல்லி கணேஷ்,கவிஞர் மனுஷ்யபுத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், டாக்டர் செந்தில்குமார், கணேசமூர்த்தி, சுப்பராயன், சண்முகசுந்தரம், திருநாவுக்கரசு, டி.கே.எஸ்.இளங்கோவன், பத்திரிக்கையாளர்கள் அ.குமரேசன், மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா, ஹாஜாகனி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் எல்.ஐ.சிக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பொதுத் துறையில் தொடரதங்களின் ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.