‘பேட் கேர்ள்’ பட டீசரை நீக்க கோரி வழக்கு
சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபசமான காட்சிகள் உள்ள பேட் கேர்ள் “Bad Girl” பட டீசரை நீக்க கோரி உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை வெங்கடேஷ் , ரமேஷ் குமார் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 26.01.2025 ,அன்று யூடியூப் இணையத் தில் பேட் கேர்ள் என்ற திரைபடத்தின் டீசர் வெளியானது.இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற ஆபசமான காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன் லைனில் உள்ளது.இது போன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகும். இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாச மான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தர விட வேண்டும். மேலும் சிறுவர் சிறுமியர் பாலியல் காட்சிகளை வெளி யிட்ட கூகுள் நிறுவனம் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த மனு புதனன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி , இந்த டீசரை சமூக ஊடகங் களில் இருந்து அகற்றுவதற்கு, யாருக்கு உத்தரவிட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் தனிப்பட்ட புகார் ஏன் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார்.அப்போது மனுதாரர் , தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. எனவே ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற் கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என கூறினார்.. இதை தொடர்ந்து,ஒன்றிய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, வழக்கு விசாரணையை வருகிற 20 ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.