சென்னை, ஜூன் 19- தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி உடனடி யாக பதவி விலக வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியு றுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கை யும் எடுக்கப் படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சால்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுமை யான குற்றச்சாட்டை கூறியிருக்கி றது. ‘செங்குன்றம் ஏரியில் தண் ணீர் குறைவது முன்பே தெரி யாதா? தமிழக அரசிடம் நீர் மேலாண்மை திட்டமே இல்லை, தமிழகத்தில் எந்த நீர்நிலைகளி லும் தூர் வாரப்படவில்லை” என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக் காக கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியாளர்க ளுக்கு குறைந்தபட்ச பொறுப் புணர்ச்சி இருக்குமேயானால் உடனடியாக பதவியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து புதிய வியாக்யானங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். மழையின்மையின் காரண மாக ஏற்படுகிற வறட்சியை எதிர் கொள்வது குறித்த நீர் மேலாண் மையை முன்கூட்டியே திட்டமிட் டுத் தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வறட்சி வந்த பிறகு தீர்வு காண முற்படுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. தமி ழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்த வரை அதை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலு மணி உடனடியாக பதவி விலக வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூற வில்லையே தவிர, குற்றச்சாட்டுக் களின் அடிப்படையில் அமைச்ச ருக்கு பதவி விலகுவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரிய வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.