tamilnadu

ஜெ.பல்கலை. விவகாரம்: அதிமுக வெளிநடப்பு

சென்னை:
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல் கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களுக்காக முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப் புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங் கப்பட்டது. அதற்கு, துணை வேந்தர் நியமனமும் நடைபெற்றது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இந்த பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், திங்களன்று (ஆக.31) தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்விநேரத்திற்கு பிறகு 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) உயர்க் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அறிமுகம் செய் தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து பேச முயன்றபோது குறுக்கிட்டு பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, “ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல் கலைக்கழகத்துடன் இணைப்பதில் எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், தற்போதைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லை என்பதால், 
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுகிறது என் றார். இம்மசோதாவை ஆய் வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன். அதில் உங்கள் கருத்தை முழுமையாக பதிவு செய்யுங்கள் என்று பேரவைத் தலைவர் மு.அப் பாவு தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திய அதிமுக உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்கின் வெளியே சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்கள்  அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நிறைவேற்றம்
பின்னர் குரல்வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.