tamilnadu

img

காப்பீடு இல்லையெனில் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்திடுக... உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து நிகழ்ந்தால் அந்தவாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் விபத்து வழக்கில் ஆவணங் களை அரசு இணையத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் புதிய நடைமுறைகளை பிறப்பித்துள்ளார்.அதில், மோட்டார் வாகன விபத்துவழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடுநியாயமாகவும், விபத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறை எளிமையாக வும் இருக்க வேண்டும். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவை தொடர்பான தகவல்கள் மற்றும்ஆவணங்களை அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக காவல் துறை டிஜி.பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அந்த வழக்கு குறித்துவிரைந்து விசாரித்து 90 நாட்க ளுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். விபத்துகளில் சம்பந்தப் பட்ட, காப்பீடு இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது .அவற்றை பறிமுதல்செய்ய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து அரசு மருத்துவமனை களிலும் விபத்து குறித்த அறிக் கையை பராமரிக்க வேண்டும். அவற்றை 7 நாட்களுக்குள் பதிவேற்றம்செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, விபத்துக் குள்ளானவரை பரிசோதித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பாயங்களில் வழக்கு தொடரும் முன்பு சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்கவும், மோட்டார் வாகன விபத்து வழக்கு களை விரைந்து விசாரிக்கவும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் உத்தரவிட்டுள்ளார்.