tamilnadu

img

படுபாதாளத்தில் இந்திய பொருளாதாரம்.... ப.சிதம்பரம் சாடல்

சென்னை:
பாஜக ஆட்சியில்இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்று விட்டதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் வெள்ளியன்று பேட்டி அளித்தார். அப்போது வங்கிக்கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உடனடியாகக் குறைத்து அறிவித்தார்.

கடந்த இரு மாதங்களில் 2-வது முறையாக வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்து. மேலும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக இந்தியாவின் வளர்ச்சி சரிவைச் சந்திக்கிறது. 2020-21-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல்முறையாக மைனஸில் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பல்வேறு அறிவுரைகளைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “தேசத்தில் நுகர்வு பழக்கம், தேவை சீர்குலைந்துவிட்டது, 2020-21-ம் நிதியாண்டில் தேசத் தின் பொருளதார வளர்ச்சி நெகட்டிவாக இருக்கும் என்று ரிசர்வு வங்கி கவர்னர் கூறுகிறார். பிறகு ஏன் சந்தையில் அதிகமான பணப்புழக்கத்தை செலுத்துகிறார்.

உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கை எடுங்கள் என்று வெளிப்படையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் மத்தியஅரசிடம் தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்டபின், மத்திய அரசோ அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதைப்பற்றி பேசுவதற்கு பதிலாக தாங்கள் அறிவித்த ரூ.20லட்சம் கோடி திட்டத் தைப் பற்றித்தான் புகழ்கிறார்கள். அவர்கள் அறிவித்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்துக் கும் குறைவுதான்.ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதகமான வளர்ச்சிக்கு(மைனஸ்) கொண்டு சென்றுவிட்டதை நினைத்து ஆர்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்