tamilnadu

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வேன்

சேலம், ஏப்.2-திமுக தலைடையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் திங்களன்று வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வீரபாண்டி ராஜா எம்எல்ஏ தலைமையில் பிரசாரத்தை தொடங்கிய வாக்கு சேகரிப்பு பயணம் பூலாவாரியில் தொடங்கியது. அப்போது வேட்பாளர்எஸ்.ஆர்.பார்த்திபன் பேசுகையில், சேலம் பூலவாரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி 8வழிச்சாலையை தமிழக அரசு அமைக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


எனவே, என்னை வெற்றி பெற செய்தால் மத்திய அரசிடம்உங்களது பிரச்சனைகளை எடுத்துக்கூறி 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப்பாடுபடுவேன். குடிநீர்பிரச்சனையை தீர்ப்பேன். விவசாயிகளுக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ரூ.7 ஆயிரம்கோடி கடன்களை ரத்து செய்தது போல், தற்போது விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். கியாஸ்விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம். உயர்த்தப்பட்ட சொத்து வரிகள் குறைக்கப்படும் என வாக்குறுதியளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடுவது போல் நினைத்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக்கூறி ஆதரவு திரட்டினார்.இதனைத் தொடர்ந்து ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில், திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், பேரூர் செயலாளர் முருக.பிரகாஷ், பாரப்பட்டி குமார், பனமரத்துப்பட்டி ராஜா, கிழக்கு மாவட்ட காங்கிரஸ்தலைவர் அர்த்தனாரி, இரும்பாலை சந்திரன், ஜே.பி.கிருஷ்ணா, கணேசன், சண்முகம், முஸ்லிம் லீக் அன்சர்பாஷாமற்றும்கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.