சென்னை, நவ.30- தென்மேற்கு வங்கக்கடலில் உரு வான பெஞ்சால் புயல் சனிக் கிழமை பிற்பகலில் கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலை யில், மாலை வரை நகராமல் வேகம் கூடுவதும், குறைவதுமாக போக் குக் காட்டியது. இரவு 7 மணிக்கு பிறகே கரையை கடக்க துவங்கியது.
இதனால் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
முன்னதாக, பெஞ்சால் புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத் தில் நகர்ந்தது. அதன் பிறகு, 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. பின்னர் போக்குக் காட்டிய பெஞ்சால் புய லின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்து, மறுபடியும் 7 கிலோ மீட் டர் வேகத்திற்கு மாறியது. இதனால் கரையைக் கடக்கும் இடம் சற்று மாறும் என்று கூறப்பட்டது.
முன்பு, காரைக்காலுக்கும் மகா பலிபுரத்துக்கும் இடையே இந்தப் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் புதுச்சே ரிக்கும் மரக்காணத்திற்கும் இடையில் கரையை கடக்க துவங்கியது. புயல் தரையை தொட்ட 3 முதல் 4 மணி நேரத் தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது. அதேநேரத்தில் புயல் கரை யை கடப்பது தாமதமாகும். ஞாயிறன்று காலைதான் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இதனால் குழப்பமான சூழல் நிலவியது.
முன்னதாக மெரினா, மரக்காணம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
கடல் அலைகள் பல அடி உயரத் திற்கு எழும்பி சீற்றத்துடன் காணப்படு வது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. சென்னை, மாமல்ல புரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக மின் விநியோகம் நிறுத் தப்பட்டது. சென்னை எண்ணூரில் கடல் அலை ஆக்ரோஷமாக 15 அடிக்கும் மேல் எழுந்து ஆர்ப்பரித்தன.
நள்ளிரவு முதல் கொட்டிய மழை
இதனிடையே, புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளியன்று நள்ளி ரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய் தது. அதி கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல், பல் வேறு இடங்களில் தூய்மை பணியா ளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஏராளமான மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றி னாலும் கொட்டிய மழைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் பலத்த காற்றுடன் இடைவிடா மல் மழை கொட்டி தீர்த்ததன் காரண மாக, பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கியது. மக் கள் வீடுகளில் முடங்கினர். காற்று பல மாக வீசுவதால் பல பகுதிகளில் அதி காலையிலேயே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இரு ளில் மூழ்கின. சென்னை முத்தியால் பேட்டையில் ஏடிஎம் அருகே இரும்புக் கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இவர், வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என தெரியவந்துள்ளது. இதே போல மேலும் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரம் அரசு மருத்துவ மனை மற்றும் குரோம்பேட்டை நெஞ் சக மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. மருத்துவமனை வளா கத்திலும், அங்குள்ள சாலைகளிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி யது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கீழ்த்தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமான நிலையம்- சுரங்கப் பாதை மூடல்
கனமழை, புயல் எச்சரிக்கை காரண மாக சென்னை விமான நிலையம் இரவு 7 மணி வரை மூடப்பட்டது. புற நகர் மின்சார ரயில் சேவை குறைக்கப் பட்டது. பூங்கா நகர் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி முறிந்து விழுந்தது. இதையடுத்து கடற்கரை தாம்பரம் இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட் டன. மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்கின. பாதுகாப்பு காரணங்க ளுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படி கள், லிப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
சென்னையில் உள்ள கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் - வீலர், பழ வந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர், அஜாக்ஸ் ஆகிய 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கார ணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலங்கள்!
தி. நகர், கிண்டி, அசோக் நகர், மேற்கு மாம்பலம், மீனம்பாக்கம், பல் லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மந்த வெளி, திருவான்மியூர், ராயபுரம், ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம் கோயம்பேடு கொளத்தூர், பெரம்பூர், எண்ணூர், மாதவரம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், வேளச்சேரி ராம் நகர் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்தது. இதையடுத்து, கார் உரி மையாளர்கள் தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி நகர், பெரம்பூர் உள் ளிட்ட பல்வேறு மேம்பாலங்களிலும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை
பெஞ்சால் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. காற்றின் தாக்கத்தால், நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளை கள் முறிந்து விழுந்தன. கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடல் அலை கள் சீற்றம் காரணமாக பல மீட்டர் உய ரத்துக்கு அலைகள் எழுந்து ஆர்ப்ப ரித்தன. முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட் டது. புயலை எதிர்கொள்ள 4 ஆயி ரம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரை, தலைமை செயலகம் அருகே உள்ள கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சீனியர் எஸ்பி கலைவாணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலர் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வானிலை மையத்தின் சார்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்க ளுக்கு ஞாயிற்றுக்கிழமையும் அதிக மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, வேலூர், பெரம்பலூர், அரிய லூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடு துறை மற்றும் நாகை ஆகிய மாவட் டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.