தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி, தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறைகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி:
துணை ஆட்சியர் - 18
துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-1) - 26
உதவி ஆணையர், வணிகவரித் துறை - 25
கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் - 13
உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை - 07
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி - 03
கல்வித் தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. ரூ.56100 - 2,05,700
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200 செலுத்த வேண்டும். விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கு தெரிவு மூன்று நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/GROUP-I_Notfication_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 31.10.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.08.2022