சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரை மீது சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
எடப்பாடி பாழனிசாமி(எதிர்க் கட்சித் தலைவர்): ஆளுநர் உரையில் வழக்கமாக அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால், அதுபோன்ற முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக தரப்பில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப் படும் என்று கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதுகுறித்தும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
நாகைமாலி (சிபிஎம்): திமுக அரசு பதவியேற்ற குறுகிய காலத் தில் கொரோனா பெருந்தொற்றின் சவால்களை எதிர்க்கொண்டும் வரும் நிலையிலும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அதேபோல், ஆளுநர் உரையிலும் அரசு மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்களையும் சுட்கடிக்காட்டியிருக்கிறார். ஆளுநர் உரையில் பலது எங்களுக்கும் உடன்பாடுதான், ஆனாலும், இன்னுமும் பல எதிர்பார்க்கிறோம். அதை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரி
விக்கும் தீர்மானத்தின் மீது நடைபெறும் விவாதங்களில் அரசுக்கு கோரிக்கையாக வைப்போம், மேலும், சில வலியுறுத்துவோம்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்): தமிழக அரசின் பல்நோக்கு திட்டங்களை அழகாக எடுத்து சொல்லியிருக்கும் ஆளுநர் உரை. பதவியேற்று இரண்டு மாதம் முடிவடைவதற்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கும் ஆளுநர் உரை இது. திமுக அரசின் ஆளுநர் உரை வரலாற்று சிறப்புமிக்கது.
ஜி.கே. மணி(பாமக): ஆளுநர் உரையில் வரவேற்கக் கூடிய அம்சங்கள் அதிகம் இருக்கிறது. எதிர்பார்த்தது இல்லாமல் ஏமாற்றம் அளிக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு அமல் படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
சிந்தனைசெல்வன்(விசிக): ஆளுநர் உரை தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே ஒளியேற்றுவதுடன் வழிக்காட்டுகிறது. பல அறிவிப்புகள் பாராட்டை பெறுகிறது. அதே நேரத்தில், இன்னும் பல அம்சங்களை இணைத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது.ராமச்சந்திரன்(சிபிஐ): தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆளுநர் உரையில் தெரிவித்திருப்பது பாராட்டுக் குரியது.
ஈஸ்வரன்(கொமதே): ஆளுநர் உரை அனைத்து கட்சிகளும் விரும்பும் வகையில் சிறப்பாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக செயல் படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஜவாஹில்லா (மமக): ஆளுநர் உரை திமுக அரசின் திரை வழியை தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காட்டியது. திராவிட இயக்கத்தின் அடித்தளமாக இந்த அரசு செயல் டும். பெரியார் கண்ட சமூக நீதி சமத்துவ ஆட்சியை கொடுப்போம் என்று தெரிவித்திருப்பது நல்ல அம்சமாகும்.