tamilnadu

img

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்காது: அமைச்சர்

சென்னை:
மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது என்று  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது” என்றார். துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பத்தவச்சிட்டியே பரட்டை என்பதைப்போன்று பழைய கருத்துக்களை பேசி பிரச்சனையை எழுப்பக் கூடாது என்றும், எதிர்காலத்தில் என்னசெய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும் என்றும் கூறினார்.