சென்னை:
தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதுகுறித்து அரசுக்கும் முறையாக தகவல் (நோட்டீஸ்) தெரிவித்தனர்.
இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங் கங்களின் பதிவாளர் சார்பாக அரசு எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு “வேலை இல்லை, சம்பளம் இல்லை” (“நோ வொர்க் நோ பே”) என்ற அடிப்படையில் சம்பளப் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த சுற்றறிக்கை மூலம் நியாயவிலைக் கடை ஊழியர்களின் போராட் டத்தை ஒடுக்குவதற்கு தமிழக அரசு மிரட்டல் விடுத்திருக்கிறது.ஏற்கெனவே, சத்துணவு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதற்கும் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ள எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக தீர்வு கண்டு நிறைவேற்ற முன்வராமல் மிரட்டல் விடுவது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.