விழுப்புரம், ஆக. 11- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் டி.மீனா தலைமை யில் நடைபெற்றது. மாநாட்டில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டி பாபு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநில துணைத் தலைவர் பா.சித்திரைச்செல்வி, மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம், சிஐடியு விழுப்புரம் மாவட்டத் தலை வர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பால கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் ஆர்.மலர்விழி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமதிலகம், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பிரேமா, வல்லம் எஸ்.கோவிந்தம்மாள், விழுப்புரம் எஸ்.பிரியா, கோலியனூர் பி.கலையரசி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 7 ஆவது ஊதியக் குழுவில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டபடி ஓய்வூதி யம் ரூ.3500 வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை துறை சார்ந்த பணியை தவிர மற்ற பணி களில் ஈடுபடுத்தக் கூடாது, ஓய்வு பெறும் பணியாளர்க ளுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவராக ஏ.பழனியம்மாள், செயலாள ராக ஆர்.மலர்விழி, மாவட்ட பொருளாளராக ஆர்.ராமதிலகம், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.