tamilnadu

img

பாத்திமா தற்கொலை: நீதிகேட்டு 2 மாணவர்கள் உண்ணாவிரதம்

பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி இரண்டு ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த 8-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என பாத்திமாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஐஐடியைச் சேர்ந்த அசார் மொய்தீன், ஜஸ்டின் ஜோசப்  என்ற 2 மாணவர்கள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை , குறை தீர்க்கும் குழு அமைக்கக் வேண்டும் என்ற மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.