tamilnadu

img

வேளாண் விரோத சட்டங்கள் ரத்து கோரி விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம்.....

சென்னை:
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரானவேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரிசனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார்.

விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக அரசு2020 ஜூன் 5 ஆம் தேதி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் சட்டங்களை அவசர சட்டமாக பிறப்பித்தது. அதன்பின்னர் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதைஎதிர்த்தும், விவசாயிகளின் நலன்களை காவுகொடுக்கும் வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற கோரியும் ஆறுமாதத்திற்கும் மேலாக தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஜூன் 5 ஆம் தேதியன்று நாடுமுழுவதும் “சட்ட நகலெரிப்பு போராட்டம்” நடத்திட அறைகூவல் விடுத்தது.இதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில், தாம்பரம் பேருந்துநிலைய அஞ்சலகம் அருகே சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசியபெ.சண்முகம், “மூன்று வேளாண் சட்டங் களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து 6 மாதத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர். போராட்டக் களத்தில் 475க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். போராட்டக்குழு அறைகூவல்படி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது” என்றார்.

“3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இந்த சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம். இந்த சட்டங்களைஎதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே இதற்கான தீர் மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.இந்தப் போராட்டத்தில் அமைப்பின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் அனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.