சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து மின்சார ரயில் நடைமேடை ஏறி விபத்துக்குள்ளானது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு அலுவலகம் செல்வோர், மாணவ மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் யாரும் பயணிக்காததால், எந்தவித உயிர்சேதம் ஏற்படவில்லை. இதில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்தார். மேலும் நடைமேடையில் இருந்த கடைகள் சேதமடைந்தன.
பிரேக் சரியாக இயங்காததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.