விழுப்புரம், டிச.13- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் முதியேர் உதவித் தொகையை பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவல கத்துக்கும், தனியார் வங்கிக்கும் மூதாட்டிகள் அலைக்கழிக் கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல் ஒலக்கூர், கடுகப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூதாட்டி கள், விதவை, முதியோர் உதவித் தொகைகளை செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் கடந்த பல ஆண்டுகளாக பெற்று வந்தனர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக முதி யோர் விதவை உதவித்தொகைகளை தனியார் வங்கியில் இருந்து பெற முடியாமல் மூதாட்டிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த காசியம்மாள் (65). ஆதரவற்ற விதவையான இவர் தமிழக அரசின் உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை கடந்த பல ஆண்டுகளாக பெற்று வந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 13 மாதங்களாக அவருக்கு உதவித்தொகை வரவில்லை. இதுகுறித்து மேல்ஒலக்கூரில் உள்ள அந்த தனியார் வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு, சமூக நலத் துறை தனி வட்டாட்சியரிடம் சென்று கேளுங்கள் எனக் கூறி, வங்கி நிர்வாகத்தினர் அனுப்பிவைத்துள்ளனர். வட்டாட்சியர் அலு வலகம் சென்று கேட்டதற்கு, உங்களது பணம் நிறுத்தப்பட வில்லை என்றும், தொடர்ந்து வங்கிக்கு அனுப்பப்பட்டு வருவ தாகவும் கூறி, பணம் அனுப்பப்பட்டுள்ளதற்கான பட்டி யலை காண்பித்துள்ளனர். இதனையடுத்து, மீண்டும் தனியார் வங்கிக்கு சென்ற போது, காசியம்மாளின் விரல் ரேகைகள் கணினியில் பதியப் படவில்லை என்றும், ஆதார் அட்டை சரியில்லை என்றும் முதியோர் உதவித்தொகையை விநியோகிக்கும் ஊழியர் கூறியுள்ளார். இந்த மூதாட்டியைப் போன்று மேல்ஒலக்கூர் கிரா மத்தைச் சேர்ந்த சரோஜா (60), சின்னம்மாள் (65), கடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (60), மன்னம்மாள் (70), பச் சையம்மாள் (65) உள்ளிட்டோரும் முதியோர் விதவை உதவித் தொகைகளுக்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை உள்ளது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குளறுபடிக்கான காரணங்களைக் கண்டறிந்து, தனியார் வங்கியில் இருந்து முதியோர், விதவை உதவித் தொகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூதாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.