tamilnadu

img

மணல் கொள்ளையால் சேதமான குடிநீர் கிணறு

மதுராந்தகம்,ஜூலை 13- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பழையனூர்  கிராமம் அருகே பாலாற்  றில் கிணறு அமைத்து குடிதண்ணீர் வழங்கப்  பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் நில வும் வறட்சியால் கடுமையான குடிதண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. இந் நிலையில்,  பாலாற்றில் அங்கங்கே ஆழ்துளை  கிணறு கள் மற்றும் கிணறுகள் அமைத்து கிராமங்க ளின் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து வருகின்றது.  பழையனூர் உள்ளிட்ட பாலாறு பகுதி யில் உள்ள குடிதண்ணீர் கிணறு மற்றும் குடிநீர்  குழாய்களை சேதப்படுத்தி மணல் கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையம் கோட்டாட்ச்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு ஆதாரத்து டன் புகார் தெரி வித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கமியூனிஸ்ட் கடசியின் பழையனூர்  கிளைச் செயலாளர் வானிதமணி கூறுகையில்,“ பல ஆண்டு களாக  எங்கள்  ஊரில் குடிதண்ணீர்  தட்டுப்பாடு  ஏற்பட்டதில்லை. பாலாற்றில் அரசு சார்பில்  மணல் குவாரி அமைத்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் திருட்டுத்தனமாக கொள்ளையடிப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது” என்றார்.