சென்னை,ஏப்.28-தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தநிகழ்வில் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கானகாசோலையை ஞாயிறன்று(ஏப்.28) ஸ்டாலின் வழங்கினார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறுகையில், ஒலிம்பிக்போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன்” என்றார்.முன்னதாக, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் கோமதி, தபிதா,மாதேஷ் ஆகியோருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் தேவாரம், செயலாளர் சி.லதா, நிர்வாகிகள் சைலேந்திரபாபு, ஆர். சுதாகர், ஷைனிவில்சன், அஜய் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தடகள சங்கம் சார்பாக தங்க நாணயம்பரிசு வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் சங்கம் தரப்பில் கோமதிக்குரூ.5 லட்சம், தபிதாவுக்கு ரூ.3 லட்சம், மாதேஷ்க்கு ரூ. 2 லட்சமும் நிதி வழங்கப்பட்டது. நேரு விளையாட்டு மைதானம் எதிரே உள்ள விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோமதிக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. அங்கு பேசிய கோமதி தற்போது கர்நாடகஅரசுத்துறையில் தாம் பணியாற்றி வருவதாகவும், தமிழக அரசு தனக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.சென்னை மயிலாப்பூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பாராட்டு விழாவில் கோமதி மாரிமுத்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.