tamilnadu

நீராதாரத்தைச் சூறையாடும் சாராய ஆலைகள்!

நீராதாரத்தைச் சூறையாடும் சாராய ஆலைகள்!

நடந்து கொண்டிருக்கும் புதுச்சேரி சட்டசபையில் 6 சாராய ஆலைகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கி, அனுமதி அளித்திருப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் 5000 பெண்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிக்கொள்கிறார்.  சிபிஎம் கேள்விகள் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போதுள்ள 8 மதுபான தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9 கோடி மட்டுமே வருமானம் கிடைக்கிறது. அவற்றில் 400 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இந்த 8 சாராய ஆலைகளும் 1942 லிருந்து 2003 வரை நீண்ட கால இடை வெளியில் 60 ஆண்டுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2022ல் சில சுயநலமிகள் முயற்சி செய்து 2025-ல் ஒரே ஆண்டில் 6 ஆலைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் என்ன?  புதிதாக வரவுள்ள 6 தொழிற்சாலை கள் மூலம் 5000 பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதுபான தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரைத் தவிர பிற கச்சாப் பொருட்கள் அனைத்தும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி, பாட்லிங் செய்து வெளி மாநிலங்களுக்கே எடுத்துச் செல்லப்படுகிறது. புதுச்சேரியில் தண்ணீரை உறிஞ்சுவது மட்டுமே மதுபான தொழிற்சாலைகளின் வேலை. எனவே அவைகள் நீரை உறிஞ்சாது என்பதில் எள்ளளவும் உண்மையில்லை. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இயங்கி வந்த அரசு சாராய ஆலை குறித்து, தனிநபர் தொடுத்த பொதுநல வழக்கில், உச்சநீதிமன்றம் அதை மூடச் சொல்லி 1997 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யிருக்கிறது. (வழக்கு எண் 184 /1996) தீர்ப்பில் இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது .அளவுக்கு அதிகமான நிலத்தடி நீரை இந்த ஆலை உறிஞ்சுகிறது. காற்று அதிக அளவில் மாசுஅடைகிறது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்த சாராய ஆலை இங்கு மூடப்பட்டு வில்லியனூர்- ஆரியபாளையம் அருகில் மாற்றப்பட்டு  இயங்கி வரு கிறது. அந்த சாராய ஆலையிலும் இப்பொழுது எரி சாராயம்  வாங்கப்பட்டு, பாட்டிலிங் மட்டுமே நடை பெற்று வருகிறது. ஒரு லிட்டர் விற்பனைக்கான  சாராயம் தயாரிப்ப தற்கு 15 லிட்டருக்கு மேல் நீர் உறிஞ்சப்  படுகிறது. அண்டை மாநிலங்கள் சாராய ஆலைகள் உரு வாவதற்கும், நீரா தாரத்தை இழப்ப தற்கும் தயாராக இல்லை. எனவே தான் சாராய ஆலைகளால் கொள்ளை லாபம் சம்பாதிக்க தொழிலதிபர்கள் புதுச்சேரியை நோக்கி வருகிறார்கள்.  ஜிஎஸ்டி   மதுபானத் தொழிற்சாலைகள் மாநில ஜிஎஸ்டி கட்டுவதில்லை, அனைத்தும் ஐஜிஎஸ்டி மட்டுமே கட்டுகின்றன.    அதனால் அரசுக்கு ஜிஎஸ்டியும் கிடைக்காது. மக்களின் நலன் மதுபான ஆலைகள் அதிக மானால், மது விற்பனை அதிகரிக்கும்.இளைஞர்களை குடும்பங்களை சீரழிக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். சட்ட ஒழுங்கு கெடும்,  விபத்துக்கள் அதிகரிக்கும். புதிய மதுபான ஆலைகளால் அரசுக்கு வருவாய் கிடைப்பது குறை வாக உள்ளது. அதேநேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பும் , சமூக சீர்கேடும் அதிகமாக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் வேலையின்மையை போக்கவும் மூடிக்கிடக்கும் பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள், சிறு தொழில கங்களைக் கொண்ட தொழிற் பேட்டை கள், ஆண்டுக் கணக்கில் ஊதியம் இல்லாமல் மூடி கிடக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றை மீண்டும் இயக்க ஆட்சியாளர்கள் முயற்சி  எடுப்பதே வேலை வாய்ப்புக்கான மாற்று வழியாகும். சாராய ஆலைகளும் ரெஸ்ட்டோ பர்களும் இளைஞர்களை சீர ழிப்பதற்கே பயன்படும்.ஏற்கெனவே நாட்டில் அதிக சமூக குற்றங்கள் நடக்கு மிடமாகவும், இளம் விதவைகள் இருக்கும் இடமாகவும் இருக்கிறது. மேலும் சாராய ஆலைகள், ரெஸ்ட்டோ பார்கள் திறப்பது இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே உதவி செய்யும் .பாஜக -என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி யாளர்களின் இத்தகைய நடவடிக்கை களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையான கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறது. மதச்சார்பற்ற, இடதுசாரி   ஜனநாயக இயக்கங்களும், சமூக அக்கறை உள்ள அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. ஆட்சியாளர்கள் சாராய ஆலைகள் திறக்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு கேட்டுக்கொள்வதாக மாநிலச்செயலாளர் எஸ். ராமச்சந்திரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.