tamilnadu

img

புதிய சாலை கோரி ஆர்ப்பாட்டம் 10 நாளில் சாலை அமைக்க அதிகாரி உறுதி

சென்னை, ஜூன் 18 - தரமணி வி.வி.கோவில் தெருச் சாலையை 10 நாட்களில் செப்பணிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் உறுதி அளித்தார். 180வது வட்டம், தரமணி ரவுண்டானா-விலிருந்து காந்தி நகர் வழியாக வி.வி.கோவில் தெரு செல்கிறது. டைடல் பார்க், டைசில் பார்க், கானகம் போன்ற பகுதிகளுக்கு தரமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் வி.வி.கோவில் தெருச்சாலை வழியாக செல்கின்றன. மேலும் தண்ணீர் லாரிகள், டெம்போ வேன்களும் இந்தச்சா லையை பயன்படுத்து கின்றன. இதனால் சாலை மிகமோசமான நிலையில் உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இந்த வி.வி.கோவில் தெருச்சாலையை செப்பணிட வேண்டும், காந்தி நகரின் உட்புறச்சாலை களையும் சீரமைக்க வேண்டும். கழிவு நீர் காலவாய் அடைப்புகளை நீக்க வேண்டும் என வலியு றுத்தி செவ்வாயன்று (ஜூன் 18) அன்று ‘அங்கு பிரதட்சன போராட்டம்’ நடை பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்திருந்தது. அதன்படி தரமணி ரவுண்டானா - வி.வி.கோவில் தெருச்சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதனைய றிந்து அங்கு வந்த மாநக ராட்சி உதவி பொறியா ளர் மூர்த்தி, கட்சியின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சாலையை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி கோராப்பட்டுள்ளது. வேறு ஒரு பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. 10 நாட்களுக்குள்ளாக வி.வி.கோவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இப்போராட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் ரபீக், ராமமூர்த்தி, குமார், ஜெயக்குமார், ஆஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.